பரவாக்கோட்டை
 
பரவாக்கோட்டை  தமிழ்நாடு,திருவாரூரில் அமைந்துள்ள  ஓர் அழகிய கிராமம்.சுமார் பத்தாயிரம் குடும்பங்களை கொண்ட  பெரிய ஊர்.காட்டாறு,பெரியாறு மற்றும் தென்னை,வாழை தோப்புகள் சூழ்ந்த பசுமையான கிராமம் பரவாக்கோட்டை.
 
பரவாக்கோட்டை மேற்கு வீதி,கிழக்கு வீதி,தெற்கு வீதி,வடக்கு வீதி என நன்கு பெரிய தெருக்களை கொண்டது.இதை தவிர அம்பதுக்கும் மேற்ப்பட்ட குறு தெருக்களை உள்ளடக்கியது.பரவாக்கோட்டைக்கு மேற்கே மதுக்கூர் ,வடக்கே பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் கொண்ட மன்னார்குடி அமைந்துள்ளது.
 
பரவாக்கோட்டையில் வசிக்கும் மக்களில் பெரும்பாலனோர் தேவர் இனத்தோர். அம்பலக்கரர் மற்றும் செட்டியார் இனத்தோரும் குறிப்பிடும் எண்ணிக்கையில் உள்ளனர்.பல தலைமுறையாக அனைத்து இனத்தோரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.
 
உள் மற்றும் வெளி நாடுகளில் பணி புரியும் மக்களால் பரவாக்கோட்டை செல்வ செழிப்புடன் விளங்குகிறது. பரவக்கோட்டையில் குடும்பத்திற்கு ஒருவர் வெளி நாட்டில் பணிபுரிகின்றனர்."குட்டி சிங்கபூர்"  என்னும் அடை மொழியும் பரவக்கோட்டைக்கு உண்டு.இப்போது உள்ள புதிய தலைமுறையில் அனைவரும் படித்து பட்டம் பெற்று மின் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி புரிகின்றனர்.

விவசாயம் தான் பிரதான தொழில் என்றாலும் தென்னை ,கடலை ,உளுந்து ,கரும்பு போன்ற அனைத்து தானிய வகைகளும் பயிரிடபடுகின்றது. பட்டுக்கோட்டை ,மன்னார்குடி வழியாக சென்னை செல்லும்  நெடுஞ்சாலை பரவாக்கோட்டையை சென்னையுடன் 

இணைக்கிறது.நீடாமங்கலம் ரயில் பாதை மற்றும் திருச்சி விமான நிலையம் ஆகியவை பரவாக்கோட்டை
கிராமத்தை வெளி உலகோடு எளிமையாக இணைக்கும் போக்குவரத்து ஆகும்.
 

மத்திய அரசு தற்போது ரயில் போக்குவரத்து பரவாக்கோட்டை வழியாக மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை வரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான பணி துவங்கி உள்ளது.

 

சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு தற்போது புதிய ரயில் விடப்பட்டுள்ளது.

எங்களுக்கு மிக்க மகழ்ச்சி!!!
நாங்கள் ஆவலுடன் பட்டுக்கோட்டை வரை ரயில் நீட்டிப்பு செய்வதை எதிர்பார்கின்றோம்!!!