உழைக்கிற கைகள் உயர்த்தப்பட வேண்டும்!

29/10/2010 15:23
கொண்டாங்கள்!
அழைப்பு விடுக்கின்றன
தொலைக்கட்சிகள்!
 
விழிகளுக்குள்
விளக்கெண்ணெய் விட்டு
தேடிப் பார்த்து விட்டேன்!
 
பத்திகைகளாகட்டும்
தொலைகட்சிகளாகட்டும்
உழைப்பவனையும் காணோம்
உழவையும் காணோம்
 
எதன் பொருட்டு
விழாக்கள்
 
விழாவின் நாயகர்கள்
இல்லாத விழாக்கள்
யாருக்காக!
 
உற்சவமூர்த்திகள்
இல்லாத உற்சவங்கள்
யாருக்காக!
 
அசினும் பிசினும் 
இன்னும் பிறரும் 
உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்தவர்களா!
 
இல்லை மாடுகளுக்காவது
புல் அறுத்தவர்களா!
 
எந்த தொலைகட்சியாவது
ஏதேனும் ஒரு உழவனை
பேட்டி கன்டதாய்
சரித்திரம் உண்டா!
 
ஒரு முதுபெரும்
உழவனை
கெளரவித்ததாய்
சேதிகள் உண்டா!
 
என் சிற்றறிவுக்கு
எட்டியவரை
எந்த முன்னேற்றமுமில்லாத
ஒரே தமிழன் உழவன் தான்
 
ஒருவேளை காந்தி
உயிரோடிருந்தால்
இன்னமும் மேல்சட்டை
போட்டிருக்கமாட்டார்
 
அவர் மேல்சட்டை
கழற்றிய வரலாறு
மதுரை உழவர்களின்
மாநாட்டைச் சேர்ந்தது!
 
ஆனால் உழவன் பெயரில் 
விழாக்கள்
வியாபரங்கள் 
படிமன்றங்கள் 
அரசியல்கள் 
 
இன்னும்
எத்தனை  எத்தனை
 
ஏளனபடுத்துகின்ற
இலவசங்கள்
 
மானத்தை குறைக்கிற
மானியங்கள்
 
இவை உழைப்பவனை
அசிங்கபடுத்துகிற
விசயங்கள்
 
உழைக்கிற கைகள்
உயர்த்தப்பட
வேண்டும்
 
விளைவிக்கிற தானியங்களின்
விலை தங்கத்தின் மேலாய்
மதிப்பிடல் வேண்டும்
 
யோசியுங்கள்
உங்கள் கை
உணவைத் தொடும்போது
யோசியுங்கள்
 
நிஜத்தை விட்டு
வெகுதுரம்
விலகி வந்துவிட்டோம்
     -இ.இளவரசி மூலம் : மின்னஞ்சல்
Back