செல்லக்குட்டி லக்க்ஷனா

29/10/2010 15:43
செல்லக்குட்டி! பட்டுக்குட்டி! தங்கக்குட்டி!
அழகு தங்கம் ! குட்டி மானு!
ஓராயிரம் முறை சொன்னாலும்
வலிப்பதில்லை வாய்!
அலுப்பதில்லை மனது !

முகத்தில் கிள்ளும் பிஞ்சு கை
தத்தி தத்தி நடக்கும் பஞ்சு பதம்
அழுவலகம் முடித்து அவசரமாய் சென்று
கதவிடுக்கில் மறைந்து நின்று "செல்லக்குட்டி"
என்றழைக்கும்போது காட்டும்
போக்கை வாய் சிரிப்பு
எட்டு மணி பணி நேரப்பிரிவுக்கு பிறகு
என் முகம் பார்த்து மலரும் நிலா முகம்

பெயருக்கேற்ற லட்சணம்
பயங்கர சுட்டித்தனம்
மருந்துக்கு மட்டுமே
அழும் அவள் மற்ற எதற்குமே
மறந்தும் அழுததில்லை !

       -இ.இளவரசி

 

Back