வேளாண்மை

 

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல் பவர்


உழவு செய்து அதனால் கிடைப்பதை உண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்கின்றவர் ,மற்றவரெல்லாம் பிறரைத்
தொழுது உண்டு பின் செல்கின்றவர்களே!
 
 
பரவாக்கோட்டையை சுற்றிலும் பசுமையான வயல்வெளிகளும், உயர்ந்த தென்னை மரங்களும் ,மிகப் பெரிய மாமர தோட்டங்களும்,புதிய தழைத்த பல்வேறு வகை செடியினங்களும் அடர்ந்துள்ளன.பரவாக்கோட்டையில் முப்போகமும் விளையும்  முதன்மை சாகுபடி பயிர் "நெல்" .
 
முதல் போகம் "குறுவை"  என்றழைக்கபடுகிறது.இது மூன்றரை மாத காலம் வளரும் குறுகிய கால பயிர்.
இரண்டாம் போகம் "தாளடி"  என்றழைக்கபடுகிறது.இது ஆறு மாத காலப்பயிர்.மூன்றாம் போகம் "சம்பா"  என்றழைக்கபடுகிறது.இது ஆறு மாத காலம் வளரும் நீண்ட கால பயிர் . இதை தவிர சோழம்,உளுந்து,கடலை,கரும்பு ஆகியவை மற்ற வேளாண் பயிர்களாகும்.